tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நகைக்கடையில் கொள்ளை: மும்பைக்கு தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது

சேலம், ஆக.26- தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலத் தில் அவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இக்கடை யில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு என்பவர், கடையி லிருந்து 37 சவரன் (298.400 கிராம்) தங்கக் கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விட் டல் சண்டே திங்களன்று திருநெல்வேலியி லிருந்து மும்பை செல்லும் தாதர் விரைவு ரயி லில் தப்பிச் செல்வதாக தூத்துக்குடி மத்திய போலீசார், சேலம் ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் திங்க ளன்று இரவு 9:30 மணிக்கு சேலம் ரயில் நிலை யம் வந்த தாதர் விரைவு ரயிலில், சேலம் ரயில்வே காவல் துறையினர் சோதனை  நடத்தினர். அதில் பயணித்த விட்டல் சண் டேவை கைது செய்த காவல் துறையினர், அவ ரிடமிருந்து 37 பவுன் நகை, ரூ.43,330 பணத்தை பறிமுதல் செய்து, தூத்துக்குடி காவல் துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

போதை மாத்திரை விற்பனை: 2 பேர் கைது

நாமக்கல், ஆக.26- பள்ளிபாளையம் அருகே போதை மாத் திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமி ருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரை களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலாம் பாளையம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஞாயிறன்று காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர். அதில், ஆலாம் பாளையம் ஆசிரியர் காலனி குடியிருப்பு பகுதியில் அறை எடுத்து உள்ளூரைச் சேர்ந்த  இரு இளைஞர்கள் தங்கி இருப்பதாகவும், அடிக்கடி வெளியே சென்று வருவதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், அவர்கள் தங்கி யிருந்த அறையில் சோதனை மேற்கொண்ட போது, வலி நிவாரணி மாத்திரைகளை ஆன் லைன் மூலமாக வாங்கி, போதை மாத்திரை கள் எனக்கூறி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், ஒரு மாத்திரை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 250 ரூபாய்க்கு விற்று வந்ததும், மாத்திரைகளை வாங்கிச் செல்லும் இளைஞர்கள், தண்ணீரில் கரைத்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி மயக்க நிலையில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வெடியரசம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (26), பிரகாஷ் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை பறி முதல் செய்தனர்.

தனியார் விடுதிகளில் போலீசார் ஆய்வு

சேலம், ஆக.26- ஏற்காட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதி களில் போலீசார் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங் களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகை புரிகின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஏராளமான குடில்கள் மற்றும் ரிசார்ட்கள் இயங்கி வரு கின்றன. இந்நிலையில், ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ஆன்டனி மைக்கேல் தலை மையில் போலீசார், பல்வேறு தங்கும் விடுதிக ளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், பதி வேடுகள் முறையாக பரமரிக்கப்படுகிறதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? விடு திகளில் தங்கும் நபர்கள் சரியான முகவரி  அளிக்கிறார்களா? என சோதனை செய்தனர். விடுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண்களை அனுமதிக்கக்கூடாது, சந்தேகப்படும்படியான நபர்களாக இருந் தால் காவல் நிலையத்தற்கு தகவல் தெரி விக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

நாளை குறைதீர் கூட்டம்

நாமக்கல், ஆக.26- எரிவாயு நுகர்வோர்க ளுக்கான குறைதீர் கூட்டம் வியாழனன்று (நாளை) நடைபெறவுள்ளதென, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண் ணெய் மற்றும் எரிவாயு நிறு வன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ் தர்கள், நுகர்வோர்கள், தன் னார்வலர்கள் ஆகியோர் களுடன் “எரிவாயு நுகர் வோர்கள் குறைதீர் கூட்டம்” வியாழனன்று (நாளை) நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் பிற்பகல் 3  மணிக்கு இக்கூட்டம் நடை பெறவுள்ளது.  எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர் வோர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக் கைகளை தெரிவித்து மனுக் கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.