tamilnadu

img

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 17 - ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நெடுநாட்கள் வாழ்வா தாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர்  மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் வியாழனன்று வட் டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. குறிப்பாக, 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1க்கு பிறகு பழைய  ஓய்வூதியத் திட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதி மன்றத் தீர்ப்பின் காரணமாக 2010 ஆகஸ்ட் 23க்கு முன் பணியில் சேர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், அரசின்  பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியி டங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான வரம்பினை  நீக்கி பழைய முறை தொடர வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற  நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன டியாக வழங்க வேண்டும். 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம்  செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணி யில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம்  வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41மாத பணி  நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு  ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.