நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் வெள்ளியன்று தீக்கதிர் சந்தா வழங்கும் பேரவை கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகத்திடம் சந்தாக்களுக்கான தொகை வழங்கப்பட்டது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.சுரேஷ், எஸ்.தமிழ்மணி, ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, எம்.கணேசபாண்டியன், ஆர்.சந்திரமதி, எம்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா, இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.ரமேஷ், வீ.தேவரா ஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.