tamilnadu

img

பழங்குடியினர் பெயரில் மோசடி மலைவாழ் மக்கள் சங்கம் புகார்

பழங்குடியினர் பெயரில் மோசடி மலைவாழ் மக்கள் சங்கம் புகார்

தருமபுரி, ஜூலை 27- பழங்குடியினரின் பெயரில் டிராக்டர் வாங்கி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ்  சங்கத்தினர், தருமபுரி மாவட்ட பழங்குடி நல அலுவலர் அசோக்குமாரிடம் சனியன்று மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம்,  எரிமலை இருளர் குடியிருப்பு பகுதியில் பலர் விவசாயக்கூலி களாக உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமமான ஏரிமலை இருளர் குடியிருப்புக்கு மகேந் திரா டிராக்டர் கம்பெனி பிரதிநிதி சதாசிவம் மற்றும் தருமபுரி யைச் சேர்ந்த ஸ்ரீராஜலட்சுமி ஏஜென்சி, சோனாலிகா டிராக் டர் சேல்ஸ், சர்வீஸ் ஸ்பேர்ஸ், ஆகியோரின் பிரதிநிதிகள் வந் துள்ளனர். மானிய விலையில் தாட்கோ கடன் உதவியுடன்  டிராக்டர் வாங்கித் தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்காக  இருளர் மக்களிடம் சாதிச்சான்று, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு கடன் விண்ணப் பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கினர். அதற் குப்பின்பு உங்கள் பெயரில் டிராக்டர் வாங்க வங்கிக்கடன் கிடைத்தவுடன், டிராக்டரை கொண்டு வந்து தருகிறேன் என்று  கூறிவிட்டு சென்றனர். இதன்பின் சில மாதங்கள் கழித்து வந்த தபாலில், இரு ளர் மக்களின் பெயரில் டிராக்டரின் பதிவு எண் சான்று  வந்துள்ளது. ஆனால், டிராக்டரை கண்ணில் கூட காட்ட வில்லை. இதுகுறித்து விசாரித்ததில், மேற்படி மகேந்திரா டிராக்டர் கம்பெனி பிரதிநிதி, இருளர் மக்கள் 15 பேர் மீது  டிராக்டரை தாட்கோ மானிய கடன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கூலித்தொழில் செய்து பிழைத்து வரும் பழங்குடியினருக்கு அரசு கொடுக்கும் உதவி யுடன் சொந்தமாக டிராக்டர் வாங்கி பயன்படுத்தலாம் என்ற  ஆசை நிராசையாக மாறிவிட்டது. எனவே, பழங்குடியின ரின் பெயரில் டிராக்டரை அபகரித்துக் கொண்ட நபர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழங்குடி யினர் பெயரில் வாங்கிய டிராக்டரை மீட்டுத்தர வேண்டும் என  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.