tamilnadu

img

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை,அக்.11- அரசு போக்குவரத்து ஊழியர்கள் வாழ்வாதாரக் கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சனியன்று  உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 2003 க்கு பின்னால் பணியில் சேர்ந்த  தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய  டி.ஏ. மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர்  நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் - காங்கேயம்  சாலை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு காத்திருப்பு  போராட்டத்திற்கு ஆதரவாக உடுமலை போக்குவரத்து பணி மனை முன்பு சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்  சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் விஸ்வநாதன், பாபு, கார்த்தி கேயன், பெரிய மயில்சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.