tamilnadu

img

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், செப். 15 - வாழ்வாதார கோரிக்கைகளுக்கு போராடி வரும் அரசுப் போக்குவரத்து ஊழி யர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆதர வாக தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும், பணி ஓய்வு பெறும் நாளி லேயே பணப்பலன்கள் வழங்கப்பட வேண் டும், பணியில் இருக்கும் போது இறந்த ஊழி யர்களின் குடும்பத்தார்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழி லாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநில மையத்தின் முடிவின்படி தாராபுரம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக திங்களன்று மதிய உணவு  இடைவேளையின்போது அரசு ஊழியர் சங்க  வட்டக் கிளை தலைவர் கே.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைச் செயலாளர் சு.சிவராசு, பொருளா ளர் எஸ்.சுமதி ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு நிர்வாகி ரவிச்சந்திரன், தாராபுரம்  சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி  பொன்னுசாமி, என்.சுப்பிரமணி ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாவட்ட இணைச் செய லாளர் எம்.மேகலிங்கம் நிறைவுரை ஆற்றி னார். இதில் அரசு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர். வட்டக் கிளை செயலாளர் இல.தில்லையப்பன் நன்றி கூறினார். அவிநாசி: அதேபோல் அவிநாசி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அவிநாசி வட்டக்கிளை செய லாளர் கருப்பன், மாவட்ட இணைச்செ யலாளர் ராமன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.