பொதுத்தொழிலாளர் சங்க மகாசபை
திருப்பூர், ஜூலை 27- பொதுத்தொழிலாளர் சங்க மகாசபையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றிய சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம், ஞாயிறன்று, சங்கத்தின் தலைவர் கொ.பெரியசாமி தலைமையில் நடை பெற்றது. துணைச்செயலாளர் கே.ஏ.சக்திவேல் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி. முத்துசாமி துவக்கவுரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வாழ்த்திப் பேசினார். வி. ஒன்றியச் செயலாளர் காமராஜ், பொருளாளர் ஆர்.மணியன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து சங் கத்தின் தலைவராக கொ.பெரியசாமி, செயலாளராக வி.காம ராஜ், பொருளாளராக கே.ஏ.சக்திவேல், துணைத்தலைவராக ஆர்.சேகர், துணைச்செயலாளராக ஆர்.மணியன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டப் பொருளாளர் ஜெ.கந்தசாமி நிறைவுரையாற்றினார். ஆர்.சேகர் நன்றி கூறினார்.