அரசு கலைக் கல்லூரியில் இலவச யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் துவக்கம்
கோவை, ஜூலை 25- கோவை அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில், 2025-26 கல்வியாண்டிற்கான இலவச யு.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் துவங்கியது, இதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் இணைந் துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இலவச யு.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரு கின்றனர். 2025-26 கல்வியாண்டில் கோவை அரசு கலை கல்லூ ரியில் 1,961 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் யு.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர். வார நாட்களில் நடை பெற உள்ள பயிற்சி வகுப்புகள் புதனன்று துவங்கி யுள்ளது. இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் யாழினி, 2014 முதல் கோவை அரசு கலைக்கல்லூரியில் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்கப் பட்டு வருகிறது. அரசியல் அறிவியல் துறை தலைவர் கனக ராஜ் இந்த வகுப்புகளை எடுத்து வருகிறார். நடப்பு கல்வி யாண்டின் முதல் நாளே சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து ஐ.ஏ.எஸ். கனவு பயணத்தை துவங்கியுள்ளனர். மேலும் ஏழை, எளிய முதல் தலைமுறை பட்டதாரி குடும்ப குழந்தைகளுக்கு அதிக பயனை கொடுத்து வருகிறது. மேலும் எங்கள் மாணவர் கள் இந்திய துணை கண்டம் முழுவதும் ஆட்சியாளர்களாக, பெரும் அதிகாரிகளாக இருப்பார்கள் என்ற கனவு உள்ளது என தெரிவித்தார்.