காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர் உண்ணாவிரதம்
நாமக்கல், ஜூலை 30- நிலுவையிலுள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி, திருச்செங் கோடு காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்கள் புதனன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் 1925 ஆம் ஆண்டு மூதறி ஞர் ராஜாஜி-யால் துவங்கப்பட்டது. கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற் றும் விவசாயிகள் வாழ்க்கை நடத்த துவக்கி வைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற ஆர்.பாஸ்கரன் என்பவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்தி ஆசிரமம் நுழைவுவாயில் முன்பு முன்னாள் ஊழியர்கள் புதனன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊழியர் வைரவன் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம், சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர் ஐ.ராயப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் முன் னாள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்ட னர்.