நெருங்கும் தீபாவளி பண்டிகை: அதிகரிக்கும் வியாபாரிகள் ஆர்வம்
ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான வியாபாரங்கள் நடந் தாலும், ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெறும் வியாபாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கரு தப்படுகிறது. இந்தத் பண்டிகை, வர்த்தகர்களுக்கு லாபத்தையும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச் சியையும் தருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு, பல்வேறு நிறுவனங்கள் தங் கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். இந்த போனஸ் தொகையைப் பயன்ப டுத்தி, தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசி கள் என அனைத்து தரப்பினரும் துணிகள், இனிப்புகள், பட்டாசு கள், சமையல் மற்றும் வீட்டு உப யோகப் பொருட்கள் எனப் பல பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவர். இதனால், வணிக வளா கங்கள், ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வியாபா ரம் களைகட்டும். தீபாவளிக்கு சுமார் 15 நாட்க ளுக்கு முன்பே வரும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்கள், தீபாவளி கொண்டாட்டங்களுக் கான உற்சாகத்தைத் தொடங்கி வைக்கும். இந்தச் சமயத்தில், பூஜைப் பொருட்கள், பொரி கடலை, வாழை மரம் போன்ற வற்றை விற்கும் தற்காலிகக் கடை கள் பெருமளவில் அதிகரித்து காணப்படும். இது வியாபாரிக ளுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருவதால், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தற்போ திருந்தே விற்பனையைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின் றனர். நாமக்கல் ஈரோடு சாலையில் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரி இது குறித்துக் கூறுகையில், “ஒவ் வொரு ஆண்டும் தீபாவளி பண்டி கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வியாபாரிகள் தங்கள் விற் பனையை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்வோம். ஜவு ளிக் கடைகள் புதிய ஆடைகளை அதிக அளவில் இருப்பு வைக்கும். பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் சிறப்புத் தள்ளுபடிகளை யும், பேக்கரிகள் கூடுதலாக இனிப்பு மற்றும் கார வகைகளை யும் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேகரிப்பார்கள். இந்த உற்சாகம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வியாபாரிகளிடம் தொற்றிக் கொள்ளும்” எனத் தெரி வித்தார். நிரந்தரக் கடைகளைத் தவிர, தீபாவளி பண்டிகை சமயத்தில் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைப்பதும் வழக்கம். சிறிய ஜவுளிக் கடைகள், இனிப்பு மற்றும் கார வகைகளை விற்கும் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல கடைகள் சாலையோரங்களில் முளைக்கும். சில தனியார் மண்ட பங்களில், வெளி மாநிலங்களிலி ருந்து கொண்டு வரப்பட்ட மலி வான விலையுள்ள துணிகள் மற் றும் வீட்டு உபயோகப் பொருட் களை விற்பனை செய்யும் கடை களும் அமைக்கப்படுவதுண்டு. இவை அனைத்தும் தீபா வளிக்கு முந்தைய மாதத்தை ஒரு மிக முக்கியமான வியாபார மாத மாக மாற்றுகிறது. அக்டோபர் 20-ஆம் தேதி வரும் தீபாவளியை வர வேற்கும் விதமாக, வாடிக்கையா ளர்களுக்கு மலிவான விலையில், தரமான பொருட்களை வழங்குவ தற்கான தயாரிப்புகளில் வியாபாரி கள் இப்போதிருந்தே ஈடுபட்டு வரு வதாக அந்த வியாபாரி மேலும் தெரிவித்தார். எம்.பிரபாகரன்