ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 30- ரேசன் பொருட்களை வீடு களுக்குச் சென்று வழங்க வேண்டுமென அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங் கில் மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் மாற் றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவி லான குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து மற்றும் பொருளாளர் வி.ராஜு உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடை களுக்குச் சென்று வரிசையில் காத்திருந்து ரேசன் பொருட்களை பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே, அவர்களுக்கு வீட்டிற்கே சென்று அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மூன்று சக்கர வாகனம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த முகாம் நடத்தி ஓட்டுநர் உரிமம் வழங்க வேண் டும். மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் நடத் தப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சி யர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பூபதி, தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் நல சங்கத்தினர்கள் உட்பட அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.