மாற்றுத்திறனாளிகள் சங்க கோபி மாநாடு
கோபி, ஆக.11- மாற்றுத்திறனாளிகள் சங்க கோபி தாலுகா முதல் மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா முதல் மாநாடு ஞாயிறன்று, கோபி யிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புரா ஜன், மாவட்டத் தலைவர் சாவித்திரி, செயலாளர் ப.மாரி முத்து, முன்னாள் செயலாளர் டி.சுப்பிரமணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.மாரிமுத்து, வி.சுந்தர ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மல்லிகா, தாலுகா செயலாளர் க.பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். இம் மாநாட்டில், ஊராட்சிகளில் வசிக்கும் மாற்றுதிறனாளிகள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். சொந்த வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதையடுத்து சங்கத்தின் தாலுகா தலைவரக கே. ஆறுமுகம், செயலாளராக ஆர்.சோமசுந்தரம், பொருளாள ராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.