அவதூறு பரப்பிய தினமலர் நாளிதழ்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
திருப்பூர், அக்.24- திருப்பூர் மாநகராட்சியில் தீபாவளிக்கு கட்சி வித்தியாசம் இன்றி எல்லா கவுன்சிலர் களும் தலா ரூ.3 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பி னர் எந்த தொகையையும் பெறவில்லை. எனவே மறுப்பு செய்தியை வெளியிடா விட்டால் சட்ட நீதியான நடவடிக்கை எடுக் கப்படும் என மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தினமலர் நாளிதழில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, டீ கடை பெஞ்ச் பகுதியில், திருப்பூர் மாநகராட்சியில் தீபாவளிக்கு கட்சி வித்தியாசம் இன்றி எல்லா கவுன்சி லர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் கொடுத்தி ருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 53 ஆவது வார்டு கவுன்சிலர் மணிமேகலை, திருப்பூர் மாநகராட்சியில் யாரிடமிருந்தும் இது போன்ற தொகை எதையும் பெற வில்லை என்பதை திட்டவட்டமாக தெரி வித்துக் கொள்கிறேன். அப்படி இருக்க கட்சி வித்தியாசம் இன்றி அனைத்து கவுன்சி லர்களும் கவனிக்கப்பட்டதாக, தினமலர் செய்தி வெளியிட்டு இருப்பதற்கு எங்கள் வன்மையான மறுப்பை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பழுக்கின்றி செயல்ப டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொத்தாம் பொதுவாக அனைவரும் கவனிக்கப்பட்ட னர் என்று தினமலர் எழுதியிருப்பது சரி யல்ல. கண்டனத்திற்குரியது. எனவே மேற் கண்ட தகவலுக்கு, எங்கள் கட்சி கவுன்சிலர் மணிமேகலை மறுப்பை செய்தியாக வெளி யிடும்படி தினமலர் ஆசிரியரை கேட்டுக் கொள்கிறோம். இந்த மறுப்பு செய்தியை வெளியிடாத பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சட்ட ரீதியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.