குட்டையில் முதலை: பொதுமக்கள் அச்சம்
மேட்டுப்பானையம், ஜூலை 2- மேட்டுப்பாளையம் அருகே கிராமப்புற மழைநீர் தடுப்பணை குட்டையில் முதலை நடமாட்டம் உள்ள தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் மழைநீர் வடிந்து செல்லும் குட்டை உள்ளது. மழைக்காலங்க ளில் பட்டக்காரனூர், பொகலூர், தாளத்துரை கிராமங்க ளில் இருந்து வரும் தண்ணீர், இந்த குட்டை வழியாக பவானி ஆற்றை அடைந்து வருகிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பருவமழை காரணமாக, இந்த குட்டை நிரம்பி அதன் உபரிநீர் பவானி ஆற்றுக்கு சென்ற நிலையில், அந்த குட்டையில் முதலை இருப்பது தென் பட்டு, வனத்துறையினர் அதனை பிடித்து சென்றனர். தற் போது எஞ்சியுள்ள தண்ணீரில் மீண்டும் ஒரு முதலை இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 12 அடிக்கு மேல் நீளமுள்ள இந்த முதலை இரவு நேரத்தில் தண்ணீரிலி ருந்து வெளியே வந்து கிராமத்தை யொட்டிய பகுதிகளில் உலவி வருகிறது. எனவே, சிறுமுகை வனத்துறையினர் குட்டையிலுள்ள முதலையை பிடித்து செல்ல வேண்டும் என கிராம மக்கள் வலியு றுத்தியுள்ளனர்.