சாலையை சீரமைக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கோவை, அக்.8- சாலைகளை சீரமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி யினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை, கணபதி மாந கர், வெற்றிவிநாயகர் நகர், வ.உ.சி. போலீஸ் கோட்ரஸ், கே.கே.நகர், பாரதி நகர், ஜி.கே.புரம் உள்ளிட்ட பகுதி களில் பாதாள சாக்கடைக் குழாய் பதிப்புப் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு முடிக்கப்படாமல் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடி யாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமகிருஷ்ண புரம் தண்ணீர் தொட்டி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு நகரக்குழு உறுப்பினர் எம்.ஏழுமலை தலைமை ஏற்றார். இதில், தரமான தார்ச்சாலை அமைத்திட வேண்டும். சூயஸ், யுஜிடி, எரிவாயு குழாய் இணைப்புக்கு முன் வைப்புத் தொகை கேட்ப தைத் தவிர்க்க வேண்டும். வரி உயர்வை உட னடியாக கைவிட வேண்டும் என வலியுறுப் தப்பட்டது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கமணி, நகரச் செயலா ளர் எஸ்.நாராயணசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். கே.நாகராஜன் நன்றி கூறினார்.
