மாணவிகளிடம் அத்துமீறல்: நடவடிக்கைக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக.20- பெருந்துறை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி வியாழ னன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளதென மார்க்சிஸ்ட் கட்சி யினர் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் செயல்பட்டு வரும் அர சுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், கடந்த ஜூலை 30 ஆம் தேதி யன்று மாணவ, மாணவிகளை அடித்து துன்புறுத்துவதுடன், மாண விகளிடம் தொடர்ந்து பாலியல் சீண் டலில் ஈடுபடுகிறார் என்றும் கூறப் பட்டது. இதுகுறித்து அதேபள்ளி யின் மற்றொரு ஆசிரியரிடம் பாதிக் கப்பட்ட மாணவிகள் புகாரளித்த னர்; தலைமை ஆசிரியர் கவனத் திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசி ரியரின் வேண்டுகோள்படி, மாண விகளின் பெற்றோருடன் பொது மக்களும் பள்ளிக்கு வந்தனர். அப் போது பள்ளியிலிருந்த சம்பந்தப் பட்ட ஆசிரியர், பெற்றோர்களின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட் டுள்ளார். ஆனால் பொதுமக்க ளும், பெற்றோரும் சமாதானமடை யாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். காவல் துறையினர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பாதிக்கப் பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்து, உறுதியான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதன்பிறகு வேறு பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் அங்கு சென்றனர். அவர்கள் மாண விகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் அங்கம் வகிக் கும் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பள்ளி வளா கத்திற்குள் வந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற் றோர்களிடம், நடவடிக்கை எடுத் தால் பெண்களின் பெயர், புகைப் படம் செய்திகளில் வரும் என்றும், அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், பெற்றோரையும் ஊரி லிருந்து காலி செய்து விடுவதாக வும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் முறையிட்ட னர். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கும் கொண்டு சென்ற னர். காவல் ஆய்வாளரும், துணை கண்காணிப்பாளரும் விசாரணை யில் நடந்த சம்பவம் உண்மை என அறிந்ததால் நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தனர். ஆனால் எது வும் நடைபெறவில்லை. காவல் துறையினர் இச்சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக் காததால் ஊக்கமடைந்த குற்ற மிழைத்தவர் தரப்பினர் உள்ளூர் ஆட்களை வைத்து மாணவிகளின் பெற்றோர்களை மிரட்டி சமரசம் செய்துள்ளனர். பள்ளியில் நடைபெற்ற இச்சம்ப வம் குறித்து தலைமை ஆசிரிய ரால் வட்டார கல்வி அலுவலகத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டது. இவ்விசாரணை யில், மாணவிகளிடம் பாலியல் சீண் டலில் ஆசிரியர் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. அத்துடன் அவருக் கிருந்த செல்வாக்கும், ஆள் பல மும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் புகார் கொடுக்காமல் தடுத் துள்ளனர் என்பதும் தெரிய வந் தது. மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றமும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு, பாலி யல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், உரிய நடவ டிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம், வட்டார பள்ளிக்கல்வித்துறை மற் றும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ருக்கு அனுப்பிய மனுவில் தெரி வித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிட மும் புகார் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழ னன்று (இன்று) பெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடை பெறவுள்ளது.