சிபிஎம் போராட்ட அறிவிப்பு
நாமக்கல், ஜூலை 28 – குளருபடியான குடிநீர் விநியோகம், குண்டும் குழியுமான சாலை உள்ளிட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி பள்ளி பாளையம் நகராட்சியை கண்டித்து சிபிஎம் போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் பல் வேறு அடிப்படை பிரச்சனைகள் நிலவி வருகிறது. குறிப்பாக, அக்ரஹாரம் 1,2,3 வார்டுகளில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் கள் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், பொது மக்கள் குடிநீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இங்கு உள்ளது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கட்சியின் அக்ரஹா ரம் கட்சிக்கிளையின் சார்பில் வெகுவிரைவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து, சுவரொட்டி மற்றும் பேனர்களை வைத்துள்ளனர்.