tamilnadu

கோவை விமான நிலையம் 4 மடங்கு விரிவாக்கம்

கோவை விமான நிலையம் 4 மடங்கு விரிவாக்கம்

கோவை, செப்.16- கோவை விமான நிலையம் தற் போதைய அளவை விட 4 மடங்கு  பெரியதாக விரிவாக்கப்பட உள்ளதாக விமான நிலைய இயக்குநர் சம்பத் குமார் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செவ்வாயன்று விமான நிலைய இயக்கு நர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கோவை விமான நிலைய விரிவாக் கம் 605 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள் ளப்பட உள்ளது. இதற்கான நிலங்கள்  விரிவாக்கப் பணிக்காக ஒப்படைக்கப் பட்டுள்ளன. நில அளவீடு பணிகள் கடந்த ஜனவரி முதல் நடைபெற்று வரு கின்றன. சில இடங்களில் பிரச்சனைகள்  இருப்பதால், மாநில அரசுடன் இணைந்து அளவீடு பணிகள் இறுதிக்  கட்டத்தில் உள்ளன. இது முடிந்தவுடன்  விரிவாக்கப் பணிகள் தொடங்கும். மேலும், விமான நிலையத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 ஆம்  தேதிக்குள் சுற்றுச்சுவர் பணிகள் முடிக் கப்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. தற்போது 2,900 மீட்டர் நீள முள்ள ஓடுபாதை, விரிவாக்கத்திற்குப் பின் 3,800 மீட்டராக உயர்த்தப்படும். இது பெரிய விமானங்கள் இயக்கு வதற்கு உதவும். தற்போது 18,000 சதுர மீட்டராக உள்ள விமான நிலையம், விரிவாக்கத் திற்குப் பின் 75,000 சதுர மீட்டராக அடி யாக அதிகரிக்கும். தற்போதைய கட்டி டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, விமான நிலையத்தின் முகப்பு தோற் றம் அவினாசி சாலையில் உள்ள லீ மெரி டியன் ஹோட்டல் அருகே மாற்றப்பட உள்ளது என்றார்.