சரக்குகளை அதிகளவில் கையாளும் கோவை விமான நிலையம்!
கோவை, அக்.17- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை விமான நிலையம் சரக்குகளை அதிக ளவில் கையாண்டு வருகிறது. கோவை விமான நிலையத்திலிருந்து தின மும் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, புனே, சீரடி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபு தாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் விமா னங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தின மும் சராசரியாக 32 விமானங்கள் இயக்கப்படு கின்றன. கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்கின்ற னர். இதுதவிர உள்நாடு, வெளிநாடுகளுக்கு கோவை விமான நிலையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கு அலுவலகத்தில் இருந்து சரக்குகளும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நி லையில் தீபாவளி பண்டிகையையொட்டி, கோவையிலிருந்து விமானத்தில் சரக்குகள் ஏற் றுமதிக்கான ‘புக்கிங்’ அதிகரித்துள்ளது. இதுகு றித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறு கையில், உள்நாட்டு பிரிவில் வழக்கமாக மாதந் தோறும் 500 டன்னுக்கு கீழ் சரக்குகள் கையாளப் படும். ஆனால், கடந்த மாதம் 547 டன்னாக அதிக ரித்தது. அதுவே தீபாவளி பண்டிகையை முன் னிட்டு தற்போது சரக்கு புக்கிங் அதிகரித்துள்ள தால், அக்டோபர் மாதம் 625 டன்களுக்கு மேல் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. வழக்க மாக காய்கறி, உணவுப் பொருட்கள் தான் அதிக ளவில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற் போது இனிப்பு, கார வகைகள் மற்றும் செல் போன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பல்வேறு பொருட்கள் அதிகம் அனுப்பி வைக் கப்படுகின்றன, என்றனர்.