tamilnadu

img

குழு காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும்படி ஒன்றிய அரசை வலியுறுத்த எம்.பி.க்களுக்கு சிஐடியு கடிதம்

குழு காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும்படி  ஒன்றிய அரசை வலியுறுத்த எம்.பி.க்களுக்கு சிஐடியு கடிதம்

திருப்பூர், செப்.26- குழு காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய ஜவுளித் துறை மீண்டும் நடைமுறைப்படுத்திட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தும்படி விசைத் தறி தொழில் உள்ள மாவட்டங்க ளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்களிடம், சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் நேரில் கோரிக்கை கடி தம் கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி யில் வியாழனன்று விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் சோமசுந்தரம் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சம் மேளனப் பொதுச்செயலாளர் பி. முத்துசாமி, மாநிலப் பொருளாளர் அசோகன் உள்பட மாநில நிர்வா கக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில் விசைத் தறித் தொழிலாளர்களுக்கு பயன ளித்து வந்த குழு காப்பீட்டுத் திட் டத்தை ஒன்றிய அரசு கடந்த  2019 ஆம் ஆண்டு எவ்வித அறி விப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. இப் பிரச்சனையை நாடாளுமன்ற உறுப் பினர்கள் மூலம் ஒன்றிய அரசி டம் வலியுறுத்துவது என்று தீர்மா னிக்கப்பட்டது. குறிப்பாக, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், விருதுநகர், தேனி, சேலம், தென்காசி, திரு வள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், மதுரை மாவட்டங்களை உள்ள டக்கி தமிழகம் முழுவதும் விசைத் தறி தொழிலில் வார்பிங், சைசிங், வைண்டிங், வீவிங் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுத் தொழிலாளர் களுக்கும் குழு காப்பீட்டுத் திட் டத்தை, மத்திய ஜவுளித்துறை, எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்தது. இதற்கு  ஒரு தொழிலாளி வருடத்திற்கு பிரி மியமாக ரூ. 80 மட்டும் செலுத்தி னால் போதும். இத்திட்டத்தின் மூலம் விசைத்தறி தொழிலாளிக ளின் குடும்பத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ரூ. 1200 உதவித்தொகையும், 18  வயது முதல் 60 வயதுக்கு உட்பட் டவர்களுக்கு இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 60 ஆயிரமும், விபத்து மரணத்திற்கு ரூ. 2 லட்ச மும் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் வயதை இரண் டாகப் பிரித்து 18 முதல் 50 வயது வரை இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சமும், 51 முதல் 60 வயது வரை இயற்கை மரணத்திற்கு ரூ.60 ஆயிரம், விபத்து மரணத் திற்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என ஒன்றிய அரசின் ஜவுளித்துறை அறிவித்தது ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படாம லேயே, கடந்த 2019 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது.  இவ்வாறு விசைத்தறி தொழி லாளர்களின் குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும் பேருதவியாக இருந்த குழு காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தியதால், விசைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே விசைத் தறி தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்திற்கு உதவிடும் இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என  தமிழ்நாடு விசைத்தறி தொழிலா ளர் மாநில சம்மேளனம் வலியு றுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.  போனஸ் கோரிக்கை மேலும், இக்கூட்டத்தில், தீபா வளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி, விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியு றுத்தப்பட்டுள்ளது.  எம்.பி.யிடம் கோரிக்கை கடிதம் விசைத்தறித் தொழிலாளர் களுக்கு குழு காப்பீட்டுத் திட் டத்தை மீண்டும் கொண்டு வர, ஒன்றிய அரசிடம் வலியுறுத்தும்படி திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தத்தை  புதனன்று அவரை நேரில் சந்தித்து விசைத்தறித் தொழிலாளர் சம்மே ளனப் பொதுச் செயலாளர் பி. முத்துசாமி கோரிக்கை கடிதத்தை வழங்கினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த ஆர்.பழனிச்சாமி, ராஜன் இருந்தனர்.