நீதிமன்ற தீர்ப்பின்படி தினக்கூலி வழங்கு: சிஐடியு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 14 – சென்னை உயர்நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பின்படி தூய்மைப் பணி யாளர்களுக்கு ரூ.745ஐ தினக்கூலி வழங்க கோரி, சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு குறை வாக ஊதியம் நிர்ணயித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை திரும்பப் பெறவேண்டும். அரசாணை 2டி எண் 62-ன் படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு தினக் கூலி முறையே ரூ.745/-, ரூ.657/-, ரூ.568/- வழங்க வேண்டும். என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, ஊரக வளர்ச்சி சங்கத்தின் மாவட்ட செயலா ளர் டி. வெங்கட்ராமன், மாவட்ட இணை செயலாளர் ஆர். செல்வம், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.