60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
உதகை, அக்.5- குன்னூர் அருகே 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்தவர்கள் மருத்துவர் அலுவியா - திருமலை தம்பதியினர். இரு வரும் கோவையிலிருந்து காரில் உதகைக்கு வெள்ளி யன்று இரவு வந்து கொண்டிருந்தனர். லாஸ் அருவி அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள 60 அடி பள்ளத் தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த காரின் பின் னால் மற்றொரு காரில் வந்த மருத்துவரின் மகள் மற்றும் உறவினர்கள் விபத்தை பார்த்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், 60 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி சிறு காயங்களு டன் இருந்த தம்பதியை மீட்டனர். இச்சம்பவத்தால் குன் னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து குன்னூா் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமுஎகச மாநாடு
கோவை, அக்.5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை துடியலூர் கிளை மாநாடு ஞாயிறன்று, தொப்பம்பட்டி அமிர்தம் வளாகத்தில் நடைபெற்றது. நாகை ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் சிறப்புரையாற்றி னார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளைத் தலைவ ராக சண்முகக்கனி, செயலாளராக சூர்யபிரகாஷ், பொருளாளராக நாகை ஆசைத்தம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சூர்யபிரகாஷ் நன்றி கூறினார்.
இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி
நாமக்கல், அக்.5- சாலையின் நடுவே விழுந்த மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவ ணன், இவரது மனைவி காயத்ரி (29). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சனி யன்று மாலை ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு, இருசக்கர வாக னத்தில் இரவு 10 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, குமாரபாளையம் பகுதி யில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், பாறையூர் பகுதியில் பனைமரம் ஒன்று சாய்ந்து நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதனை அறியாத காயத்ரி வாகனத்தை வேகமாக ஓட்டியதில், இரவு நேரம் என்பதால் சாலை நடுவே விழுந்திருந்த மரத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமார பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணுவப் பயிற்சி மையம் சார்பில் மாரத்தான்
உதகை, அக்.5- குன்னூர் வெலிங்டன் எம்ஆர்சி ராணுவப் பயிற்சி மையம் சார்பில், நடைபெற்ற மாரத்தான் போட்டில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் எம்ஆர்சி ராணுவப் பயிற்சி மையம் சார்பில், உடல் நலம் விழிப்பு ணர்வு குறித்து மாரத்தான் போட்டி நடைபெற்றது, இப் போட்டியானது 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்கராஜ் மைதானத்தில் தொடங்கி ராணுவ படகு இல்லம், சப் பளைடிப்போ, சிம்ஸ் பூங்கா, எடப்பள்ளி, பந்திமை, ராணுவப் பயிற்சி கல்லூரி வழியாக விளையாட்டு மைதா னம் வந்தடைந்தனர். இதில் கலந்து கொண்ட அனை வருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ராணுவப் பயிற்சி கல் லூரி கமாண்டென்ட் லெப்டினட் ஜெனரல் மணீஷ் ஹரி, ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
தீ விபத்து: துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்கள்
கோவை, அக்.5- பொள்ளாச்சியில் தேவாலயம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீ பிடித்த நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் துணிச்சலு டன் செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதி யில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை தேவாலயத் திற்கு வெளியே நிறுத்தி இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு காரில் தீப்பற்றி எரிவதை கண்ட ஒருவர் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் வெளியே வந்து தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தீ அணைப்பான் கருவிகளைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்களுக்கு பொது மக்கள் தீயணைப்புத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
அக்.30க்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு சிறப்பு சலுகை
நாமக்கல், அக்.5- அக்.30 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி, ரூ.5,000 தள்ளுபடி பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாநகராட்சி நிர் வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொகை யினை அக்.30 ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில், இரண் டாம் அரையாண்டிற்கான சொத்துவரி விகிதாசாரத்தில் 5 சத வீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து நிலுவை மற்றும் நடப்பு வரி மற்றும் கட்டணங் களை அக்.30க்குள் செலுத்தி அபராதங்களை தவிர்த்து, தங்க ளது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.