tamilnadu

img

தீண்டாமை கொடுமையை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

தீண்டாமை கொடுமையை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழக அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 26- தீண்டாமை கொடுமையை தடுக்க, தமிழக அரசு விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட 5  ஆவது மாநாடு, பூபதி திருமண மண்டபத்தில் சனியன்று, அமைப் பின் மாவட்டத் தலைவர் பி.ஜெய ராமன் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட துணைசெயலாளர் பி. வி.மாது அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலை வர் டி.ராமலிங்கம் வரவேற்றார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா. சரவணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் கே. கோவிந்தசாமி ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், அமைப்பின் மாநிலக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் டி.மாதையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சாதி ஆண வப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சமூக பொருளாதார மற்றும் அரசி யல் நீதியை உறுதிப்படுத்த, சாதி வாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை உடனடியாக துவக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் உள்ள தீண்டாமையை கண்டறிந்து, களைய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், பள்ளிகள் துவங்கி ஊராட்சிகள் வரை நிலவும் சாதிய வன்முறைகளை தடுத்திடும் வகை யில், தீண்டாமை ஒழிப்பு விழிப் புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட நிர் வாகமும் அரசும் மேற்கொள்ள வேண்டும். எஸ்சி/எஸ்டி, வன் கொடுமை தடுப்புச்சட்டத்தை பாது காக்க அரசியலமைப்பு சட்டத்தில்  9 ஆவது அட்டவணையில் இணைக்க வேண்டும். உயர்கல்வி யில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான படிப்பு உதவித்தொகையை உறு திப்படுத்த வேண்டும். மலக்குழி மர ணங்களை தடுக்க, உயர்கல்வியில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப் பின் தருமபுரி மாவட்டத் தலைவ ராக எம்.முத்து, செயலாளராக ஏ. சேகர், பொருளாளராக டி.மாதை யன், துணைத்தலைவர்களாக சின்னு, தமிழ்மணி, பி.வி.மாது, துணைச்செயலாளர்களாக வெள் ளிங்கிரி, எல்.மாலா, என்.வரத ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநில துணைத்தலைவர்  ஜி.ஆனந்தன் நிறைவுரையாற்றி னார். மாவட்ட நிர்வாகி பி.கிருஷ்ண வேணி நன்றி கூறினார்.