கோரிக்கைகளின் மீது தீர்வு காணாத நிர்வாகம் செப்.30 இல் நேரடி இயக்கம்: ததீஒமு அறிவிப்பு
ஈரோடு, செப். 15- தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்.30-இல், நிறைவேற்றப்படாத கோரிக்கைக ளின் மீது உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி, நேரடி இயக்கத்தில் ஈடுபடுவது என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் ஈரோடு மாவட்டக்குழு அறிவித் துள்ளது. இதுகுறித்து திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனுவில் தெரி வித்துள்ளதாவது, ஈரோடு மாவட் டம், பெருந்துறை அருகே பணிக்கம் பாளையம் மேற்கு காலனியில் வீடு கட்டி வசிக்கும் மக்களுக்கு வழங் கப்பட்டுள்ள தோராயப் பட்டாவை மாற்றி தனிப்பட்டா வழங்க வேண் டும். ஈரோடு வட்டம், கூரபாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் நீர்நிலை புறம் போக்கில் வசிக்கின்றனர். அவர் களை ஆக்கிரமிப்பாளர்கள் என் றும், ஆக்கிரமிப்புகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேல் முறையீட்டில் நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியருக்கு வாய்மொழி யாக உத்தரவிட்டார். அதனை அர சாணையாக்கி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இதேபோன்று, அந்தியூர் வட் டம், குண்டுமூப்பனூரில் தெரு விளக்குகள் அமைக்க நடப்பட்ட மின்கம்பங்களை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பிடுங்கி எரித் துள்ளார். அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று உறுதிப் படுத்திய பிறகும், மின் விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மீது புகார் செய்து நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து தெரு விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல, மைக்கேல்பாளை யம் கிராமம், க.மேட்டூர், இந்திரா நகர், வையங்குட்டை பகுதியில் வசிக்கும் சுமார் 1000 குடும்பத்தின ருக்கு மயான வசதியை உறுதிப் படுத்த வேண்டும். சத்தி வட்டம், தோப்பூர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். ஆனால், மேற்கண்ட கோரிக்கைகளின் மீது இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் உள்ளது. எனவே, மேற்கண்ட கோரிக்கை கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதியன்று தோழர் பி.சீனி வாசராவ் நினைவு நாளில் நேரடி இயக்கத்தில் ஈடுபடுவது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிக்கும் நிகழ் வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. பழனிசாமி, பொருளாளர் மா. அண்ணாதுரை மற்றும் என்.பால சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிக ளும், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.அருந் ததி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.