tamilnadu

img

தீபாவளி விற்பனையில் களை கட்டும் சிறுமுகை பட்டுச்சேலை!

தீபாவளி விற்பனையில் களை கட்டும் சிறுமுகை பட்டுச்சேலை!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பாரம்பரிய கைத் தறி நெசவுக்குப் புகழ்பெற்ற கோயம் புத்தூர் மாவட்டத்தின் சிறுமுகையில் மென்பட்டுச் (Soft Silk) சேலைகளின் விற்பனை அமோகமாக துவங்கியுள் ளது. குறிப்பாக, இளம் பெண்களின் ஆர்வம் காரணமாக, இங்கு தயாரிக்கப் படும் கைத்தறி நெசவு மென்பட்டுச் சேலைகள் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. தமிழ்நாட்டுப் பெண்களிடையே, சேலைகள் என்றால், அதிலும் குறிப்பாக பட்டுச் சேலைகள் என்றால் இன்றும் தனிப் பிரியம்தான். பண்டிகைக் காலம்  வந்தால், துணிக்கடைகளில் மணிக்க ணக்கில் காத்திருந்து, பார்த்துப் பார்த்துத் தங்களுக்குப் பிடித்த சேலை களைப் பெண்கள் வாங்குவது இன்றும் மாறாத காட்சிதான். பலருக்கு ஒரு நாள் முழுவதும் துணிக்கடையில் கழிவது இயல்பான ஒன்று. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுக்குப்  பிரசித்தி பெற்றது போல, கோயம்புத் தூர் மாவட்டத்தின் சிறுமுகையில் உற் பத்தி செய்யப்படும் கைத்தறி நெசவுப் பட்டுச் சேலைகள் விற்பனையில் தங்க ளுக்கென தனி முத்திரை பதித்து வரு கின்றன. இங்குள்ள பஜார் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது. சிறுமுகையில் துணிக்கடை நடத்தி வரும் குமார் என்பவர் கூறுகையில், “இந்த ஆண்டு தீபாவளி விற்பனை உற் சாகமாகத் துவங்கியுள்ளது. குறிப்பாக,  கைத்தறி நெசவு மென்பட்டுச் சேலைக ளைப் பெண்கள் அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா, கர் நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, நீல கிரி, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றிலி ருந்து வாடிக்கையாளர்கள் வரத்து மிக வும் அதிகரித்துள்ளது. விழாக் கால விற்பனைக்காக, கைத்தறி பட்டு சேலை கள் மட்டுமின்றி, சில்க் காட்டன், காட் டன், லினன், ரூபியான், டசர் சில்க் போன்ற பல்வேறு ரகங்களில் வண் ணமயமான டிசைன்களுடன் புது மாடல் கள் குவிந்துள்ளன. குறிப்பாக, கேரளா பெண்கள் சில்லி ரெட் நிற சேலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இளம் பெண்களின் தேர்வாக மென்பட்டு இன்னொரு துணிக்கடை உரிமையா ளர் ராதா, மென்பட்டு சேலைகளுக்கான தேவை அதிகரிப்பதற்கான காரணத் தைப் பற்றிப் பேசினார். அவர், “தீபா வளி நெருங்கி வருவதால், கடைக ளுக்கு வரும் பெண் வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  உயர்ந்து வருகிறது. மென்பட்டுச் சேலைகள் மற்ற பட்டு வகைகளைப் போல இல்லாமல், எடை குறை வாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. மேலும், நாள் முழுவதும் அணிவதற்கு ஏற்றவையாகவும் இவை இருப்பதால், கல்லூரி மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த மென்பட்டு சேலைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான், இளம் பெண்களிடையே இவற் றின் விற்பனை சூடுபிடித்துள்ளது” எனத் தெரிவித்தார். கிராமப்புற நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறுமுகையைச் சுற்றியுள்ள திம்ம ராயன்பாளையம், மூலத்துறை, வெள் ளிக்குப்பம்பாளையம், பகத்தூர் உள் ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி  தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டுள் ளனர். விழா காலம் என்பதால், ஆர் டர்கள் குவிந்துள்ள நிலையில், நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதால், நல்ல வருமானம் ஈட்ட முடிகிறது. ஒரு பட்டுச் சேலையை முழு மையாக நெசவு செய்து முடிக்க 3  நாட்கள் வரை ஆகும் எனவும், சேலைக ளின் வேலைப்பாடுகளைப் பொறுத்து  நெசவாளர்களுக்கான கூலி நிர்ணயிக் கப்படுகிறது எனவும் நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இங்குத் தயாராகும் கைத்தறி பட்டுச் சேலைகள், தமிழக அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மூலமாக, நாட்டின் முக்கியப் பகுதிகளான டெல்லி, கொல் கத்தா, மும்பை, கோவா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த அமோ கமான விற்பனை, ஒருபுறம் கிராமப்புற நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, மற்றொரு புறம் நமது பாரம்பரியக் கைத்தறித் தொழிலையும் செழிக்க வைக்கிறது என்றால் அது மிகையல்ல. சிறுமுகையின் கைத்தறி நெசவாளர்களுக்கு இந்தத் தீபாவளி கைகொடுத்திருக்கிறது என்பது நிதர்ச னம்.  (நநி)