tamilnadu

img

574 கிலோ கஞ்சா அழிப்பு

574 கிலோ கஞ்சா அழிப்பு

சேலம், ஆக.28- சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் காவல் துறை யினரால் பறிமுதல் செய்யப்பட்ட 574 கிலோ கஞ்சா வியாழ னன்று அழிக்கப்பட்டது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 574  கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்வு வியாழனன்று நடை பெற்றது. எடப்பாடி அருகே உள்ள கோணமேரியில் மருத்து வக்கழிவுகளை எரியூட்டி அழிக்கும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம்  கோயல் தலைமையில் கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டது. இந் நிகழ்வில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.