நாரணமங்கலம் ஊராட்சியில் 30 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன
திருவாரூர், ஆக. 26- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் தோழர்கள் கோவிந்தன், தயாளன், நேரு ஆகியோர் தலைமையில் 30 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலைமை ஏற்றார். புதிதாக கட்சியில் இணைந்த 30 குடும்ப உறுப்பினர்களை வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டு, செங்கொடியை ஏற்றி வைத்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சியில் இணைந்த தோழர்களை வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பி.குமரேசன், டி. அந்தோணி எட்வின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.