லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
கோவை, அக்.13- மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் இளம் பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி ஞாயிறன்று நள்ளிரவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று பாலத்தில் இருந்து சமத ளத்திற்கு இறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த ஈச்சர் லாரி மீது பயங்கரமாக மோதி யது. இந்த விபத்தில் காரில் பயணித்த இளம் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கோவை பீளமேடு மற்றும்தெற்கு தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் பொக்லின் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்தனர். தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். இதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்கள் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அசன் மகன் ஹரிப் (20), ஷேக் பக்ரித் மகன் ஷேக் உசேன் (20) மற்றும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் என்பதும், ஹரிப் டவுன் ஹால் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையிலும், சேக் உசேன் கார் ஓட்டுனராகவும், உயிரிழந்த பெண் டவுன் ஹால் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
சிறுநீரக விற்பனையில் மோசடி: இடைத்தரகர்கள் இருவர் கைது
நாமக்கல், அக்.13- சிறுநீரக விற்பனையில் மோசடி செய்த இரண்டு இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 27 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறிக்கூடங் கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி நேரடியாகும், மறைமுகமாகவும், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பெண்கள் மற்றும் ஆண்களை குறி வைத்து அவர்களிடம் போலி முகவரிகள் மற்றும் ஆதார் அட்டை மூலம் சிறு நீரக விற்பனை நடைபெற்று வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்தது. இந்த புகாரின் மீதான விசாரணையில், சிறுநீரக விற்பனை யில் மோசடி நடந்துள்ளது உறுதி செய்யப்பட் டது. மேலும் ஐந்து முதல் 10 லட்சம் ரூபாய் வரை சிறுநீரகம் விற்பனை செய்வதற்கு தரு வதாக ஒப்புக்கொள்ளப்பட்டதும், சிறுநீரகம் எடுக்கப்பட்ட பிறகு பல தொழிலாளர்க ளுக்கு ஒப்புக்கொண்ட படி தொகையை தர வில்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிட்னி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கினை விசாரித்த னர். இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த், கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் ஞாயிறன்று சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசைத்தறி தொழி லாளர்கள் மற்றும் சிறுநீரக விற்பனை செய்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் பேரில் சிறுநீரக விற்பனை மோசடி யில் ஈடுபட்ட பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியினை சேர்ந்த இடைத்தர கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் ஆகி யோரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட னர். பின்னர், பள்ளிபாளையம் அரசு மருத்துவ மனையில் இருவருக்கும் மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு இருவரும் சிறப்பு புலனாய்வு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, குற்றவியல் நீதி மன்ற நடுவர் பத்மபிரியா முன்பாக நேர் நிறுத்தப்பட்டனர். இருவரையும் விசாரித்த நடுவர் இருவரை யும் வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு
பொள்ளாச்சி, அக்.13- வால்பாறை அருகே யானைகள் கூட்டம் குடியிருப்புக்குள் நுழைந்து ஒரு வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து யானை தாக்கி யதில் வீட்டினுள் இருந்த மூன்று வயது குழந்தை மற்றும் 55 வயது மூதாட்டி உயிரி ழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வருவது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று வால்பாறை வாட் டர் பால்ஸ் எஸ்டேட் அருகே ஊமையாண்டி முடக்கு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை கூட்டம் மாரிமுத்து என்பவரின் வீட்டை உடைத்து, உள்ளே இருந்த அவரது தாய் அஞ்சலா மற்றும் 3 வயது மகள் ஹேமா ஸ்ரீ ஆகிய இருவரையும் காட்டு யானை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே ஹேமா ஸ்ரீ உயிரிழந்தார். படுகாயமடைந்த பாட்டி அஞ்சலாவை மருத் துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இருவரின் உடலையும் உடற்கூறு பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வால்பாறை எஸ்டேட் பகுதியில் பாட்டி மற்றும் பேத்தி யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.