சாலை விபத்தில் மாணவர் உட்பட 2 பேர் பலி
சேலம், ஆக.3- வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், அரசுப் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த வேப் பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ் என்பவரின் மகன் ஜீவா (17). இவர் வெள் ளாளகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சனியன்று இரவு வேப்பிலைப்பட்டியில் மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு, மங்களபுரம் சாலை யில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார். வேப்பிலைப்பட்டி பால் சொசைட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலத்தைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (25) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது ஜீவா ஓட்டிச் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதியது. இவ்விபத் தில் படுகாயமடைந்த ஜீவா, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரி தாபமாக உயிரிழந்தார். மேலும், சூர்யா மற்றும் அவரு டன் வந்த கிரில் பட்டறை தொழிலாளி விஜயராஜன் (59) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பல னின்றி விஜயராஜன் உயிரிழந்தார். சூர்யாவிற்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவ்வி பத்து குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.