காங்கேயம் அருகே வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி; விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர், அக். 3 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் உயிரி ழந்தன. நாய்கள் கடித்து ஆடுகள் உள் ளிட்ட கால்நடைகளை இழக்கும் சம்ப வங்கள் தொடர் கதையாக இருப்பதால் விவசாயிகள் போராடத் தயாராகி வரு கின்றனர். பரஞ்சேர்வழி ஊராட்சிக்குட்பட்ட பொருள்குறையா கவுண்டன் வலசு கிரா மத்தில் பிரகாஷ் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப் பட்டியில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. வியா ழக்கிழமை இரவு ஆட்டுப்பட்டியில் வெறிநாய்கள் புகுந்து அங்கிருந்த ஆடு களை கடித்துக் குதறின. வெள்ளி யன்று காலை அங்கு சென்று பார்த்த போது 10 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும் பல ஆடுகள் காயமடைந்தி ருந்தன. இந்த தகவல் பரவிய நிலையில் அப் பகுதி விவசாயிகள் ஆவேசம் அடைந்த னர். தெருநாய்கள் கடித்து ஆடுகள் உள் ளிட்ட கால்நடைகள் உயிரிழக்கும் சம்ப வங்கள் தொடர் கதையாக உள்ளன. ஏற்கெனவே இப்பிரச்சனை அதிகரித்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி உயிரி ழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி னர். அதன்படி தமிழக அரசு நிதி ஒதுக்கி இழப்பீடு வழங்கியது. எனினும் குறிப் பிட்ட காலத்திற்கு மட்டும் இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலை யில் கால்நடைகளை இழந்து பொருளா தார நஷ்டத்தைச் சந்தித்துள்ள விவசாயி கள் பலர் இழப்பீடு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இந்த நிலையில் பொருள்குறையா வலசு கிராமத்தில் 10 ஆடுகள் கொல்லப் பட்டதால், இழப்பீடு வழங்கவும், இப்பி ரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வலியுறுத்தி அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செத்த ஆடுகளைக் கொண்டு செல்வதென்று விவசாயிகள் தீர்மானித்தனர். தகவல் அறிந்து காவல் துறையினர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் ஆட்சியரகத்திற்கு செல்வது என்று விவசாயிகள் உறு தியாக இருந்த நிலையில், கூடுதல் காவ லர்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்ட னர். இதனால் செத்த ஆடுகளை நிலத் தில் கிடத்தி விவசாயிகள் அங்கு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
