கோவை, நவ. 21- வேளாண்மைத் துறை யின் மூலம் செயல்படுத்தப் படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.இரா சாமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இதில், வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல் வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையி னரால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்ட இலக்கினை முழுமையாக சாதனை அடைய வேண் டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிறுவனங் களினால் வழங்கப்படும் நுண்ணீர் பாசன உபகர ணங்களின் தரம் குறித்து வட்டார வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை, தோட்டக் கலை அலுவலர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமானதாக வழங்க வேண் டும் என மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி வேளாண்மைத்துறை அலு வலர்களுக்கு உத்தரவிட் டார்.