tamilnadu

img

போராட்ட வடிவமான கோலங்கள்

கோவை, டிச. 30–  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நாள்தோறும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வாசலில் போடும் கோலங்கள் கூட போராட்ட வடிவமாக மாறியுள்ளது.  வேற்றுமையில் ஒற்றுமையாய் உள்ள இந்திய மக்களை மதரீதியில் பிரிக்கும் வகையில் மோடி தலைமையிலான மத் திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட் டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பெறும் போராட்டங்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. குறிப்பாக, மோடி அரசின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழக எடப் பாடி அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதி ராக போராடியவர்கள் மீது இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில் ஞாயிறன்று சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிலர் கோலங்கள் வரைந்து அதன் அருகில் ”நோ டூ சிஏஏ” என சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை இடம்பெற செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தமிழக அரசு கோலம் போட்ட பெண்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது  செய்தனர். இது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யது. எந்த வடிவத்திலும் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது என்கிற சர்வாதி கார நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த கைது நடவடிக்கையை அரசியல் விமர் சகர்கள் எதிர்த்தனர். 

இந்நிலையில் வாசலில் கோலம் போட்டால் கைது செய்வாய் என்றால் இதோ எங்கள் வாசலிலும் கோலம் போடு கிறோம் முடிந்தால் கைது செய் என தமி ழகத்தின் தெருக்களில் சிஏஏவிற்கு எதிர்ப்பு  தெரிவித்து கோலங்களை வரைந்து சமூக வலைத்தளத்தில் டிரன்ட் ஆக்கி வருகின் றனர். இதன்ஒருபகுதியாக கோவை ஆவா ரம்பாளையம், பீளமேடு புதூர், தொண் டாமுத்தூர், பட்டணம், ஒண்டிபுதூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீட்டின் வாசல்களில் கோலங்கள் வரைந்து தங்களது எதிர்ப்பை பெண்கள் வெளிப்படுத்தினர். இதனை தமிழக அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக போராட்ட வடிவங்களில் ஒன்றாக கோலங்கள் உருவாகியுள்ளது அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திருப்பூரில் சாலையில் எழுதியவர்கள் கைது

திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு வாசகத்தை சாலையில் எழுதியவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் காங்கேயம் கிராஸ் அரசுப் பேருந்து பணிமனை அருகில் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர்  “நோ சிஏஏ, நோ என்ஆர்சி” என ஆங்கில வாசகத்தை சாலையில் வெள்ளை நிற பெயிண்டால் எழுதினர். இதையறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களைக் கைது செய்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.ஹைதர் அலி, துணை செயலாளர் ராயல் பாஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெஹந்தி, ஓவியம் வரைந்து போராட்டம்

இதேபோல், சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று காலை தங்களின் வீடுகளில் கோலமிட்டு அதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற் றிற்கும் எதிர்ப்பு தெரி வித்து வாசகங்கள் எழுதி னர். மேலும் வீட்டி லுள்ள பெண்கள் கைக ளில் மெஹந்தி வைத்து அதில் மத்திய அரசின் மக்கள் விரோத இந்த புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்களை எழுதி னர். இதேபோல், இளை ஞர்கள் கைகளில் குடி யுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஓவியங்கள், வாசகங்களை வரைந்த னர்.  இப்போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ்,  வடக்கு மாநகர தலைவர் சதீஷ்குமார், மாநகர செயலாளர் ஆர்.வி. கதிர்வேல், துணை செய லாளர் நாகராஜ், சசி குமார், நிர்வாகிகள் மைதிலி, பொன்ராஜ் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

 

;