tamilnadu

img

இங்கிலீஷ் பிரீமியர் லீக்

இங்கிலாந்து நாட்டின் முன்னணி கிளப் கால்பந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் (அடுத்த வருடம்) வரை நடைபெறும்.20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அதிக புள்ளிகள்பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதே விதியாகும். காலிறுதி, அரையிறுதி வாய்ப்புகள் கிடையாது. நடப்பாண்டு சீசனில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணிக்கும், லிவர்பூல் அணிக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - பிரைட்டன் கோவ் அல்பியன் அணியை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி சாம்பியன் பட்டத்தை வென்று விடலாம் என்ற பதற்றமான சூழ்நிலையில் களமிறங்கிய மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 98 புள்ளிகள் பெற்றது.97 புள்ளிகள் பெற்ற லிவர்பூல் அணி இரண்டாம் இடம் பிடித்தது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி 10 வருடத்தில் இங்கிலீஷ் பிரீமியர் தொடரை அடுத்தடுத்து வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.