திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி கைது

சஹஸ்பூர்

உத்தரப்பிரதேச மாநிலம் சஹஸ்பூர் அலி நகரிலுள்ள முகமது ஷமி வீட்டுக்கு ஞாயிறன்று அவரது மனைவி ஹசீன் ஜஹான் சென்றுள்ளார்.வீட்டிலிருந்து வெளியேறுமாறு ஷமியின் சகோதரிகள் வலியுறுத்த ஜஹான் தனது மகளுடன் குழந்தையுடன் சென்று ஒரு அறையில் உள்பக்கம் பூட்டிக்கொண்டுள்ளார்.


ஜஹான் தற்கொலைக்கு முயலலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் ஷமியின் சகோதரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பிரச்சனைகள் குறித்து இரு தரப்பிலும் விசாரிக்க முடியாமல் திணறிய காவல்துறை ஹஸீன் ஜஹானை கைது செய்தது.பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த ஹசீன் ஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"எனது கணவர் வீட்டில் இருப்பதற்கு எனக்கு அனைத்து உரிமையும் இருப்பதால் தான் ஷமியின் வீட்டிற்கு வந்தேன்.ஆனால் அவரது சகோதரிகள் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர்.அவர்களுக்கு காவல்துறையும் உடந்தையாக இருந்தனர்.அவர்களை கைது செய்வதற்கு பதிலாக என்னை கைது செய்தனர்" என்று கூறினார்.


இந்த பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால்,"முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு தகாத முறையில் தொடபு வைத்துள்ளார்.துபாய் ஹோட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்" என்று ஷமியின் மனைவி புகார் அளித்தார் ஹசீன் ஜஹான் ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார். இந்த பிரச்சனையால் முகமது ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் வீட்டைவிட்டு துரத்தி விடப்பட்டார்.தற்போது இந்த பிரச்சனை புதிய வடிவில் மீண்டும் முளைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


;