கரூர் அருகே டோல்கேட் நிர்வாகம் அடாவடி
ஈரோடு, ஜன.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதியை கரூர் அருகே சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி சனிக்கிழமையன்று மாலை ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். வரும் வழியில் கரூர் அருகே மணவாசி என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி வசூல்மையத் தில் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பாலபாரதி, தான் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்று கூறி, அடையாள அட்டையை காட்டியுள்ளார். அவர் கூறியதை கேட்க மறுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள், பாலபாரதியை மிகவும் மோசமாக தரக்குறைவாக பேசி யுள்ளனர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சுங்கச்சாவடி அலுவல கத்தில் இருந்து ஒருவர் இரட்டை குழல் துப்பாக்கியுடன் வெளியே வந்து பால பாரதி காரின் முன்பு நின்று மிரட்டும் தொனி யில் பேசியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குவிந்த னர். இதன்பின்னர் சுங்கச்சாவடியின் மேலா ளர் உள்ளிட்டோர் கே.பாலபாரதியிடம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.
சமூகவிரோத சக்திகள்
இச்சம்பவம் குறித்து ஈரோட்டில் கே. பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் என கூறிய பிறகும் சுங்கச்சாவடி ஊழி யர்கள் மிக மோசமாக நடந்து கொண்டனர். சுங்கவரி கட்டணம் செலுத்துகின்றோம் என கூறியபோதும், பாஸ்டேக் என்ற அனுமதி பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என நிர்ப்பந் திக்கின்றனர். பணத்தை எடுத்துச் செல்லும்போது மட் டும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கன்மேன் கள் எனப்படும் துப்பாக்கி ஏந்திய நபர்கள், சுங்க வரி வசூல் செய்யும் இடத்தில் நின்று பணம் பறித்து வருகின்றனர். இதற்கு முறை யாக அனுமதி பெற்று உள்ளார்களா என தெரியவில்லை. ஏனெனில் சுங்கச் சாவடி களில் சமூக விரோத சக்திகளை ஆயு தங்களுடன் உட்கார வைத்துள்ளனர். யாரா வது கேள்வி கேட்டால் சுட்டுக்கொன்று விட்டு பணத்தை கொள்ளையடிக்க வந்த தாக கூறி விடுவார்களோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகள் தமி ழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற னவா என்ற கேள்வி எழுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் புகார் அளிக்க முடிவு செய் துள்ளோம் என்று கூறினார்.
சிபிஎம் வலியுறுத்தல்
சிபிஎம் கரூர் மாவட்டச்செயலா ளர் கே.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில், டோல்கேட்டில் பேச்சுவார்த்தை நடத் தும் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் என்று கூட பார்க்காமல் அடியாட்களாக மாறி துப்பாக்கி ஏந்திய நபரை வைத்து மிரட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் , அவர்கள் மீதும் டோல்கேட் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற கேப்டன் டி.வி. நிருபர் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியுள்ள னர். அடியாட்களை வைத்து இரட்டை வழிச்சாலையில் பயணிகளிடம் மிரட்டி கட்டண வசூலில் ஈடுபடும் டோல்கேட் நிர்வா கத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.