tamilnadu

தலித் மக்களுக்கு எதிராக செயல்படுபவர் மோடி

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பீம் ஆர்மி அமைப்பின் பொதுக்கூட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், ”நான் வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடப் போகிறேன். வாரணாசி மக்களின் ஆதரவு எனக்குத் தேவை. அப்போதுதான் பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிக்க முடியும்.

வாரணாசியில் போட்டியிடப் போகிறேன் என்று நான் அறிவித்ததுமே, கும்பமேளாவில் பணிபுரிந்த துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை மோடி சுத்தம் செய்கிறார். மோடி, தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரைப் பதவி, அதிகாரத்தில் இருந்து மக்கள் தூக்கி எறிய வேண்டும். தலித் மக்களின் எதிரியான அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள் தான் முக்கியம் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தியாகத்தை மக்கள் வாக்களிக்கச் செல்லும் முன்பு நினைத்துப் பார்க்கவேண்டும். தேர்தலில் மோடியை எளிதில் வெற்றி பெற நான் விடமாட்டேன். நான் அரசியல்வாதியாக இருக்க விரும்பவில்லை. சாமானிய மக்களின் மகனாக போட்டியிட விரும்புகிறேன். மோடியை மீண்டும் குஜராத்துக்கே திரும்பச் அனுப்புவதற்கு யாராவது ஒருவர் தேவை” என்று கூறினார்.

;