states

மாற்றம் இல்லாத ரெப்போ வட்டி விகிதம்

மும்பை,டிச.8- ரெப்போ வட்டி விகி தத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் ரிசர்வ் வங்கி யின் நிதி கொள்கை முடிவு தொடர்பான மாதாந்திர கூட்டம் டிசம்பர் 8 அன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டம் நிறைவடைந்த பின்னர்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறி விப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.  குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4 சதவீத மாக நீடிக்கிறது.  ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக  நீடிக்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;