மக்களவைத் தேர்தல் நெருங் கியுள்ளதால் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங் களை குறைத்து மாநிலங்களில் ரவு ண்ட்ஸ் வருகிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாநிலங்களில் அரசியல் ஆதாயத்துடன் பல் வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அரசு விழாவை அரசியல் விழாவாக மாற்றி வருகிறார். கடந்த 2 வாரங்களாக உத்தரப்பிர தேசம், தமிழ்நாடு, கேரளா, குஜ ராத் ஆகிய மாநிலங்களுக்கு மோடி சென்ற நிலையில், நடப்பு வாரத்தில் மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் சுற்றுப்பய ணம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார்.
அறிவித்தது போலவே வெள்ளியன்று மகாராஷ்டிர மாநி லம் சோலாபூரில் பல்வேறு வளர்ச் சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந் திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், உத்தரப்பிர தேசத்திற்கு அடுத்து மகாராஷ்டிரா வில் அதிக மக்களவைத் தொகு திகள் இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வருகிறார் என சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ் சய் ராவத் கடுமையாக சாடியுள் ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி மீண்டும், மீண்டும் மகாராஷ்டிரா வுக்கு வருகிறார். உத்தரப்பிர தேசத்திற்கும் அடிக்கடி செல்கிறார். இதன்மூலம் மகாராஷ்டிரா, உத்த ரப்பிரதேசத்தை அவர் அதிகமாக நேசிக்கிறார் என்று நினைக்க வேண் டாம். நாட்டிலேயே உத்தரப்பிர தேசத்திலும், மகாராஷ்டிராவிலும் அதிக தொகுதிகள் உள்ளன. இத னால்தான் பிரதமர் மோடி அடிக் கடி மகாராஷ்டிரா வருகிறார். கட ந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை மகாராஷ்டிரா வந்துள்ள மோடி, மணிப்பூருக்கு செல்ல மறுக் கிறார். அது ஏன் என புரிய வில்லை” என அவர் கூறினார்.