மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென, 4 அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்திக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மீட்பு படையினர் 2 குழந்தைகள் உட்பட 15 பேரின் உடல்களை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இதனை தொடர்ந்து இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் தலைவர் நித்தல் சேன் கைது செய்யப்பட்டுள்ளார்.