states

முஸ்லிம் மாணவனை ‘தீவிரவாதி’ என அழைத்த பேராசிரியர் சஸ்பெண்ட்

பெங்களூரு, நவ.29- பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவனை ‘தீவிரவாதி’ என அழைத்த பேரா சிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மணிப்பால் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர், சமூக  விஷயங்கள் குறித்து விவாதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், “முஸ்லிம் மாணவனை, ‘நீ ஒரு தீவிரவாதி’ என பேராசிரியர் கூறுகிறார். இதனால் வேதனை அடையும் அந்த மாணவன், “நீங்கள் ஒரு  பேராசிரியர். அப்படியிருக்க, அனைவரின் முன்னிலை யிலும் எப்படி நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூற லாம்?” என கேள்வி எழுப்புகிறார்.  அதற்கு அந்த பேராசிரியரோ, “நீ எனது மகன்  போல..” என்கிறார். அதற்கு பதிலளித்த அந்த மாண வன், “உங்கள் மகனிடம் இப்படிதான் பேசுவீர்களா? உங்கள் மகனை நீங்கள் தீவிரவாதி எனக் கூப்பிடு வீர்களா? அப்படி கூப்பிட்டால் அதுவும் தவறுதான். இது  வகுப்பறை. நீங்கள் பாடம் கற்பிக்கிறீர்கள். நீங்கள் என்னை தீவிரவாதி என கூப்பிட்டிருக்கக் கூடாது” என கூறுகிறார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், மணிப்பால் பல்கலைக்கழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட பேராசிரி யரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும்,  பேராசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

;