states

img

வடை, பஜ்ஜி சுட்டு மீந்து போன எண்ணெய்யில் ஓடும் கார்

பெங்களூரு ஜூலை 16- பெங்களூருவைச் சேர்ந்தவர் அவினாஷ் நாராயணசாமி (40). பயன்படுத்திய எண்ணெய்யில், தன் காரை ஒன்பது ஆண்டுகளாக ஓட்டி வருகிறார்.  இதற்காக இவர் ஹோட்டல்களில் போண்டா, பஜ்ஜி சுடுவதற்கு பயன்படுத்தி, மீந்து போன எண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்குகிறார். அதை ஆறு முதல் ஏழு கட்டங்களாக சுத்திகரித்து, அந்த எண்ணெய்யை எரிபொருளாக மாற்றுகிறார்.  ஒரு  லிட்டர் எண்ணெய்யில் இருந்து 700 முதல் 800 மி.லி., வரை எரிபொருள் கிடைக்கிறது. இதற்கான செலவு லிட்டருக்கு ரூ.60 முதல் ரூ.65 ஆகிறது. 2013-ஆம் ஆண்டு முதல் தன் காருக்கு இந்த எண்ணெய்யைத் தான் பயன் படுத்துகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை ஓட்டி உள்ளார். இதனால், காரின் இன்ஜினுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ., வரை, ‘மைலேஜ்’ கிடைக்கிறது. இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். மற்ற டீசல் வாகனங்களை விட புகையும் குறைவாக உள்ளது என்கிறார் அவினாஷ்.