states

img

இந்தியாவில் பட்டினி சாவு இல்லையா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில்  5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இதுகுறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தியாவில் பட்டினிச் சாவேஇல்லை என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது.  இதையடுத்து நீதிபதிகள்,  நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என ஒன்றிய அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பட்டினிச் சாவுகள் தொடர்பாக  மாநில அரசுகளிடம் இருந்து தரவுகளை சேகரித்து அறிக்கையாக  சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியான, உலக நாடுகளில் நிலவு பட்டினி தொடர்பான அறிக்கையில், 116- நாடுகளில் இந்தியா 101-வது  இடத்தில் இந்தியா இருந்தது.  பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைவிட இது மோசமான நிலையாகும். அதேபோல் 
பட்டினி சாவு குறித்து, 2019 ஆம் ஆண்டு யுனிசெப் வெளியிட்ட ‘உலகின் குழந்தைகளின் நிலை 2019’ என்ற தலைப்பிலான அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 8,82,000 குழந்தைகள் இறப்புகள்  இந்தியாவில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. மேலும்,  ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக  இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 69 சதவிகிதம் இறந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;