states

img

இந்தியாவில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய ச சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து , நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 151.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.