பீகார் சட்டமன்ற தேர்தலின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி, இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல், வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை முதலமைச்சர் வேட்பாளராக வி.ஐ.பி கட்சியின் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
