நாகாலாந்தில் இன்று எதிர்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாகாலாந்து மாநிலம் மொகோக்சங்க் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.