ஹைதராபாத், ஜன. 24 -
2024ஆம் ஆண்டிற்கான 96-ஆவது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது.
இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஓப்பன்ஹெய்மர், பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பெற்றன. குறிப்பாக ‘ஓப்பன்ஹெய்மர்’ (Oppenheimer) திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் திரைக் கதை உள்ளிட்ட 13 விருதுகளுக்கும், ‘புவர் திங்ஸ்’ (Poor Things) 11 விருதுகளுக்கும்,
‘கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன்’ (Killers of the Flower Moon) 10 விருதுகளுக்கும், பார்பி (Barbie) 8 விருதுகளுக்கும், ‘மாஸ்ட்ரோ’ (Maestro) படம் 7 விருதுகளுக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வாகிஉள்ளன.
ஆவணப்படம் பிரிவில் இந்தியாவின் ‘டு கில் ஏ டைகர்’
இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘டு கில் ஏ டைகர்’ (To Kill a Tiger) திரைப்படம் சிறந்த ஆவணப்படம் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளையும், கொடூர மான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்த ஆவணப்படம். ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களி டையை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.