states

“பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இல்லை”

“பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இல்லை”

2004 ஜனவரி 1ஆம் தேதிக்குப்பின் ஒன்றிய அரசு பணியில் சேர்ந்த வர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குமுன் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக பலன் கிடைத்ததாகவும், அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு ஊழி யர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? என்று நாடாளுமன்றத்தில் திங்களன்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,”ஒன்றிய அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை. இதுதொடர்பாக அரசு எந்த பரிசீல னையும் செய்யவில்லை. ஒன்றிய அர சின் அதிக அளவிலான நிதி பொறுப்பு  காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத் தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை” என அவர் கூறினார்.