“5 ஆண்டுகளும் நான் தான் முதலமைச்சர்”
சித்தராமையா உறுதி ; டி.கே.சிவக்குமாரும் ஒப்புதல்
2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி யது. முதலமைச்சராக சித்தராமை யாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், 4 நாட்களுக்கு முன் முதலமைச்சர் மாற்றம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள்ளேயும், எம்எல்ஏக்கள் இடையேயும் உட் கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகின. திங்களன்று சித்தரா மையாவும், டி.கே.சிவக்குமாரும் ஒன்றா கச் செய்தியாளர்களை சந்தித்து, “எங்களைப் பற்றி யார் என்ன சொன்னா லும் கவலையில்லை. நாங்கள் (டி.கே.சிவக்குமாரும்-சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என சித்தராமையா தெரிவித்தார். பேசிய பின்பு இருவரும் ஒன்றாக கையை உயர்த்திக் காட்டினர். தொடர்ந்து கர்நாடக எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து கருத்துகளை பெற கட்சி மேலி டம் சார்பில் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பெங்களூரில் முகா மிட்டதாக செய்தி வெளியாகியது. இத்தகைய சூழலில் புதன்கிழமை அன்று,”கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய் வேன்” என சித்தராமையா உறுதியாக தெரிவித்தார். மேலும் துணை முதல மைச்சர் டி.கே.சிவகுமார்,“நான் சித்தரா மையாவுக்கு ஆதரவாக நின்று, அவரை ஆதரிக்க வேண்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கட்சி மேலிடம் என்ன சொன்னாலும், அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது நிறை வேறும். நான் இப்போது எதையும் விவா திக்க விரும்பவில்லை. சித்தராமையா முதலமைச்சராக இருப்பதில் கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை” என அவர் கூறினார்.