பீகாரில் முதல் முறையாக வாக்களிக்க வேண்டிய 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
பாஜக - தேர்தல் ஆணையம் தொடர்ந்து அடாவடி
பீகாரில் இந்த ஆண்டு இறுதி யில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்த லில் வெற்றி பெற பாஜக பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங் கேற்றி வருகிறது. அதில் முதன் மையானது தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்படுவது ஆகும். வழக்கம் போல பாஜக விற்கு ஆதரவாக இறங்கியுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு களை நீக்கியுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை சுமார் 1 கோடி இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பீகா ரில் முதல் முறையாக வாக்களிக்க வேண்டிய 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர் பாக “தி வயர்” இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசா ரணையில், வாக்காளர் பட்டிய லில் கடுமையான அளவில் முறை கேடு நிகழ்ந்துள்ளது. 94 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள தாகவும் மக்கள் தொகை கணக் கின் படி கூறப்படுகிறது. மாநில அர சாங்கத்தின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை புள்ளிவிவரங்களு டன் ஒப்பிடுகையில், பீகாரில் முதல் முறையாக வாக்களிக்க வேண்டிய 20 லட்சம் வாக்காளர்களை தேர் தல் ஆணையம் நீக்கியுள்ளது என் பது தெரியவந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.