states

உமர் காலித்துக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்

உமர் காலித்துக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்

பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் எம்.பி., பேச்சு

புதுதில்லி குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது வடகிழக்கு தில்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வன்முறை வெடித்தது. இந்த  வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்ட னர். சுமார் 700 பேர் காயமடைந்தனர். பாஜக, இந்துத்துவா குண்டர்கள் கட்ட விழ்த்துவிட்ட இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு ஆய்வு மாணவர் உமர் காலித்,  ஷர்ஜீல் இமாம் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டுகளுக்கு மேலாக 10 பேரும் சிறையில் உள்ள னர். இதனை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் 9 பேரும் மேல்முறையீடு (10 பேரில் ஒருவர் முன்பாகவே மேல்முறை யீடு) செய்திருந்தனர். செவ்வாய்க்கிழமை அன்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, சைலேந்தர் கவுர் அமர்வு 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், உமர் காலித்துக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கபில்  சிபல் எம்.பி., கூறியுள்ளார். இதுதொடர் பாக உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவ ரான கபில் சிபல் மேலும் கூறுகையில், ”மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித்,  ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன்  மனுக்களை தில்லி உயர்நீதிமன்ற நீதி பதிகள் நவீன் சாவ்லா, சைலேந்தர் கவுர் அமர்வு தள்ளுபடி செய்தது. உமர் காலித் கடந்த 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 15 நாள்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் 2022,2024 ஆண்டு களில் தள்ளுபடி செய்தது. உச்சநீதி மன்றத்தில் 2023ஆம் ஆண்டுத் தாக்கல்  செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் கடந்த ஆண்டுத் திரும்பப் பெறப்பட்டது. 407 நாள் கழித்து தள்ளுபடி ஜாமீன் மனு விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இந்த வழக்கில் அமலாக வில்லை. ஏனெனில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதி மன்றம் 6 மாதங்களாக 28 முறை விசா ரித்தது. 2ஆவது முறை கடந்த ஆண்டுத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க 407 நாள்கள் எடுத்துக் கொண்டு தள்ளுபடி செய்துள்ளது. பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்து உமர் காலித்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்ப மறுக்கின்றன. வட கிழக்கு தில்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு நேரடி தொடர்பு இல்லை. மும்பையில் பேசியதற்காகத் தில்லி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அனைவரையும் விசாரித்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைத்த உதாரணங்கள் உண்டு.  வெறுப்புப் பேச்சு பேசிய தலைவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே தற்போதைய நீதித்துறை, நிர்வாகத்தின் நிலையாக உள்ளது. இதுபோன்ற சூழலில் எங்குச் சென்று நம்பிக்கையுடன் முறையிட முடியும்? நமது ஜனநாயகம் எங்கு செல்கிறது? சரியான விஷயங்களுக்குப் போராட மறுக்கிறோம். நமது வழக்கறிஞர்களும், நடுத்தர வர்க்கமும், சமூகமும் மவுன மாக உள்ளன. உமர் காலித்துக்கு ஜாமீன்  மறுக்கப்பட்டிருக்கிறது வாழ்வுரிமைக் கும், சுதந்திரத்துக்கும் எதிரானது. இது போன்ற அநீதி இழைக்கக்கூடாது. நம் பிக்கையே வாழ்க்கை. உமர் காலித்துக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடு வோம். உமர் காலித்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் கூறினார்.